ஐக்கிய தேசிய கட்சியினால் கடந்த வெள்ளிக்கிழமை கோட்டை ரயில் நிலையம் முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றாத பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக கட்சியின் தலைமைத்துவம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச, தயாசிறி ஜயசேகர ,அசோக்க அபேசிங்க , புத்திக்க பத்திரண , ரஞ்சித் மற்றும் பண்டார ஆகியோர் கலந்து கொள்ளவில்லை .
கட்சியின் எல்லோரினாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இது போன்ற எதிர்ப்பாட்டத்தில் இவர்கள் பங்குபற்றாமை தொடர்பில் கவனம் எடுக்குமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் ஆலோசனை குழுவிற்கு அறிவித்துள்ளார் என்று கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment