விரைவில் தொடர் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என்கிறது புலனாய்வு பிரிவு
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ரூபாவின் பெறுமதி குறைக்கப்பட்டமை காரணமாக பொருட்களினதும் சேவைகளினதும் விலை அதிகரிப்பினால் உருவாகியுள்ள பொருளாதார பிரச்சினையை முன்னிலைப்படுத்தி நாட்டில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறக்கூடும் என்று புலனாய்வு பிரிவு ஆட்சியாளர்களுக்கு அறிவித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளதாக லங்கா சி நிவ்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது .
சிலாபத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தைவிட இனிமேல் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள் கடுமையானதாக இருக்கும் எனவும், புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது .
எரிபொருள் விலை அதிகரிப்பு , மின்சார கட்டணம் அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு போன்றன மக்களை பெரிதும் பாதித்துள்ளதாகவும் , ரூபாவின் விலை குறைப்பு காரணமாக இறக்குமதி பொருட்களின் விலைகள் இனிமேல் அதிகரிக்கவுள்ளதால் பொது மக்கள் பொருளாதார சுமையை சுமக்க முடியாத நிலை ஏற்படும் எனவும், புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளதாக அந்த இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது .
0 comments :
Post a Comment