யாழ்ப்பாணத்திலுள்ள உணவகங்களுக்கு தர நிர்ணயம் மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் நடுபகுதி முதல் யாழ்ப்பாணத்திலுள்ள சகல உணவகங்களிலும் அவர்களது தரச்சான்றிதழ் காட்சிப்படுத்தப்படவேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்காக சுகாதார அமைச்சின் ஆலோசனையுடன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் தரச்சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
75 புள்ளிகளுக்கு மேல் யு தரமும் 50 இற்கும் 75 இற்கும் இடையில் உணவகங்களுக்கு டீ தரமும் 25 இற்கும் 50 இற்கும் இடையில் ஊ தரமும் 25 இற்கு குறைவாக னு தரமும் உணவகங்களுக்கு புள்ளி அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.
பொலநறுவையில் இவ்வாறானதொரு திட்டத்தை ஏற்கனவே சுகாதார அமைச்சு முதற்கட்டமாக மேற்கொண்டுள்ளது. அதன் வெற்றியின் காரணமாகவே இத்திட்டத்தை யாழ்ப்hணத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் தமது தரங்களைக் காட்சிப்படுத்தாத உணவகங்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment