வடபிரதேசத்திற்கு தேவையான மின்சாரத்தினை வடபுலத்திலே உற்பத்தி செய்யும் நோக்குடன் யாழ் குடா நாட்டில் 25 மெஹாவோட் கொள்ளளவு கொண்ட கணிய எண்ணெய் தொழிற்சாலை ஸ்தாபிக்கப்படுமென மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் மேற்பார்வையின் கீழ் அடுத்த ஆண்டு இந்த தொழிற்சாலையின் நிர்மாண பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மன்னார் மாவட்டத்தில் 100 மெஹாவோட் கொண்ட காற்றின் மூலம் மின் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையத்தினையும் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இது தொடர்பில் வடபுலத்தில் கால நிலையினையினை ஆய்வுக்குட்படுத்தவும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாணத்தின் அனைத்து பிரதேசங்களுக்கும் மின்சாரத்தினை சீராக வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment