2009ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று டெட்ராய்ட் சென்று கொண்டிருந்த அமெரிக்க விமானத்தை குண்டுவைத்து தகர்க்க முயன்ற நைஜீரிய பயங்கரவாதிக்கு அமெரிக்க கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. தனது அண்டர்வேரில் வெடிகுண்டை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உமர் பரூக் அப்துல்முதலாப் என்ற இந்த நைஜீரிய பயங்கரவாதிக்கு வயது 25 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீர்ப்பை அமெரிக்க நீதிபதி அளிக்கும்போது எந்த வித உணர்ச்சியையும் வெளிக்காட்டாது உட்கார்ந்திருந்தார் உமர்.
ஆம்ஸ்டர்டாமிலிருந்து 289 பயணிகளுடன் டெட்ராய்ட் சென்ற அந்த விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது ஆனால் குண்டு வெடிக்கவில்லை. ஆனால் பயணிகளும், விமான ஊழியர்களும் உமரைப் பிடித்தனர்.
அண்டர்வேரில் உமர் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது விமானத்தை தகர்த்து தூள்தூளாகச் செய்யும் பயங்கர வெடிகுண்டு.
உமரின் குடும்பத்தினர் நல்லவேளையாக ஒருவருக்கும் இந்தத் டீயினால் காயங்களோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்றும் கடவுளுக்கு நன்றி என்றும் கூறியுள்ளனர்.
குண்டினால் ஏற்பட்ட தீயினால் தான் இன்றும் இரவு நேரங்களில் தூக்கமின்றி தவித்ததாக டெல்டா விமானப் பணியாளர் மேசன் நீதிபதியிடம் தெரிவித்தார்.
அக்டோபர் மாதம் தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட உமர் அப்துல் "ஜிஹாதியாகிய நாங்கள் கடவுளின் பெயரால் கொலை செய்வதை பெருமையாகக் கருதுகிறோம். குர் ஆனில் கடவுள் இதைத்தான் எங்களை செய்யப் பணித்துள்ளார்" என்றார்.
மிச்சிகனில் சிறையில் 2 ஆண்டுகள் கழித்தபோது கூட உமர் அப்துல் தனது செய்கைக்காக சிறிதும் வருந்தவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்புரையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment