சிலாபத்தில் அண்மையில் இடம்பெற்ற மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோக பூர்வ வாசஸ்தலம் தாக்கப்பட்டமைக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தங்களின் கருத்துக்களை தெரிவிப்பதற்கு அனைத்து தரிப்பினருக்கும் உரிமையுள்ள போதிலும் அதனை ஏனையோரின் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பயன்படுத்துவது சட்ட விரோதமானதென மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க தலைவர் சந்ரா ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் சிலாபத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தை சேதப்படுத்தினர். அத்துடன் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனங்களையும் தீ யிட்டு கொளுத்தினர். இச்செயலானது நாட்டின் சட்டங்களை மீறும் செயல் மட்டுமல்லாது பிழையான முன் உதாரணம் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment