Friday, February 17, 2012

இந்திய சுவிஸ் வீட்டுத்திட்டங்களை பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்

இந்தியா அரசாங்கத்தினாலும் சுவிஸ்லாந்து அரசாங்கத்தினாலும் கட்டிக்கொடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களை பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் அலன் கேசல் ஹரட்ஸர் நேற்றைய தினம் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

இரண்டு நாள் விஜயமாக நேற்று யாழ்.வந்த பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் அலன் கேசல் ஹரட்ஸர் இன்று காலை யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கேயைச் சந்தித்துக்கலந்துரையாடினார்.

தொடர்ந்து நேற்று காலை நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு சென்று அங்கு வழிபாட்டில் ஈடுபட்டதோடு அரியாலை நாவலடியில் இந்திய அரசாங்கத்தினால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை சென்று பார்வையிட்டார்.

தொடர்ந்து அங்கிருந்து தென்மராட்சி மறவன்புலோவில் சுவிஸ்லாந்து நாட்டினால் அமைத்துக்கொடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

இவருடன் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பா.செந்தில்நந்தனன் நல்லூர் பிரதேச திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் இவருடன் வருகை தந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment