அரசாங்கம் அறிவித்துள்ள எரிபொருள் நிவாரணம் தமக்கு வேண்டாம் எனவும் விலை அதிகரிப்புக்கு முன்னர் விற்பனை செய்த பழைய விலைக்கே எரிபொருள் தமக்கு தரப்பட வேண்டும் என்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று அரசாங்கத்தை வற்புறுத்தியுள்ளனர்.
இன்று நீர்கொழும்பு , தம்மிட்ட கார்தினல் குரே நிலையத்தில் இடம் பெற்ற விசேட கூட்டத்தின் போதே மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அரசாங்க அமைச்சர்களிடம் இதனை வற்புறுத்தி கூறியுள்ளனர்.
பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன . மேல்மாகாண மீன் பிடித் துறை அமைச்சர் நிமல் லான்ஸா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே . கொழும்பு - முகத்துவாரம் முதல் புத்தளம் வரையுள்ள மீனவ சங்கங்களை சேர்ந்த 100 பேர் வரையான பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமது நிலைப்பாட்டை தெரிவித்தனர் .
இதன்போது எதிர்வரும் புதன்கிழமை இந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து தமது முடிவை தெரிவிப்பதற்கு இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டது .
ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது சாதகமான பதில் கிடைக்காவிட்டால் தமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டி வரும் என்று மீனவ சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார் .
இதேவேளை, இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை எதிர்வரும் புதன்கிழமைவரை கடலுக்கு செல்வதில்லை என நீர்கொழும்பு மீனவர்கள் தீர்மானித்துள்ளனர் .
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment