அமெரிக்காவில் இணையக் கடைக்கு செல்பவர்களைக் கண்காணிப்பதற்கென புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இணையக் கடைகள் உளவுத்துறையின் ஒரு அங்கமாக இனி செயல்படும். இணையக் கடை நடத்துபவர்கள், யார் யாரைக் கண்காணிக்க வேண்டும் என்பதை தெரிவிக்கும் ஒரு படிவம் அனைத்து கடை உரிமையாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி கீழ்கண்டவைகளை செய்யும் நபர்களை கண்காணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1. கடன் அட்டை அல்லாமல் எப்போதும் நேரடியாக பணம் செலுத்துபவர்
2. வீட்டில் இணைய இணைப்பிருந்தும் கடைக்கு வந்து பயன்படுத்துபவர்
3. அமைதிவழி ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுப்பவர்
இணையக் கடை நடத்துபவர்கள் இவ்வாறான நபர்களின் இனம், மொழி, அடையாள அட்டை ஆகிய விபரங்களை பெற்றுக் கொள்ளும்படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஏழு நாட்களுக்குத் தேவையான உணவு பொருட்களை வாங்கி வைப்பவர்கள் தீவிரவாதிகளாக இருக்க வாய்ப்புள்ளதால் அவரும் கண்காணிக்கப்படுவார். விலை உயர்ந்த ஆபகரணங்களை பயன்படுத்துபவர் மற்றும் டார்ச் வாங்குபவர் ஆகியவரும் கண்காணிப்பில் இருப்பர். இணையதளத்தை நடத்தும் நிறுவனங்கள் தங்களது தளத்தினை பயன்படுத்துபவர்கள் என்ன பதிவு செய்கிறார்கள் என்பதை கண்காணிக்கும்படி செய்யும் ஒரு சட்டத்தை நிறைவேற்ற உளவுத்துறை (FBI) முயன்று வருகிறது.
No comments:
Post a Comment