பிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.
இலங்கையின் பிரித்தானியாவுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் அம்சா அவர்களுக்கு பிரித்தானியாவின் பொது நலவாய பாராளுமன்ற சங்க மண்டபத்தில் மாபெரும் பிரியாவிடை நிகழ்வொன்றை இலங்கைக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழு தலைவர் மற்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரும் இளைப்பாறிய கலாநிதி நெசவி கடந்த திங்களன்று ஏற்பாடு செய்திருந்தனர்.
முதன்முறையாக இலங்கை பிரதிநி ஒருவருக்கு பிரித்தானியா பாராளுமன்றத்தில் வழங்கப்பட்ட பிரியாவிடை நிகழ்வு இதுவாகும் இந்நிகழ்வில் பிரித்தானியா பாராளுமன்ற பிரமுகர்கள் வெளிநாட்டு பிரமுகர்கள் பொது நலவாய அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் பல்வேறு உயர்ஸ்தானிகர்கள் உட்பட இலங்கையை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் பிரசன்னமாகியிருந்தார்கள்.
இன்நிகழ்வில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நெசவி கருத்து தெரிவிக்கையில்
அம்சா அவர்கள் பிரித்தானியாவுக்காhன பிரதி உயர்ஸ்தானிகராக பதவிவகித்த கடினமானதும் சிக்கலானதுமான நேரத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி ஊக்குவிப்பதில் தொடர்ச்சியான முயற்சிளை மேற்கொhண்டார் அத்துடன்; தற்போது இலங்கையின் நடைபெற்றவரும் சமரச செயல்முறையை செயற்படுத்த பல்வேறு புலம்பெயர் அமைப்புக்களை ஒன்றினைத்து செயற்படுத்தவதில் முக்கிய பங்கு வகித்தார் என்று தெரிவித்தார்.
இம்மாதம் 15ம் திகதியுடன் தனது பிரித்தானியாவுக்காhன பதவிகாலத்தை முடித்து ஜேர்மனிக்ககான பிரதி உயர்ஸ்தானிகராக பதவியேற்கவிருக்கும் அம்சா அவர்களுக்கு இலங்கையை சேர்ந்த பல்வேறு அமைப்புக்களும் பல்வேறு பிரியாவிடை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன.
0 comments :
Post a Comment