Tuesday, February 14, 2012

அரசின் மானிய அறிவிப்பைத் தொடர்ந்து யாழ். மீனவர்களது போராட்டம் கைவிடப்பட்டது.

எரிபொருட்களுக்கு மானியம் வழங்குவதாக அரசாங்கம் அறிவித்தைத் தொடர்ந்து யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தால் மேற்கொள்ளப்படவிருந்த பகீஸ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலைகள் யாவும் கடந்த 11ம் திகதி நள்ளிரவு அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் மேற்கு கரையோரத்திலுள்ள கடற்றொழிலாளர்களும் மன்னாரிலுள்ள கடற்றொழிலாளர்களும் பகீஸ்கரிப்பு போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர்

இந்நிலையில் இவர்களது போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக நாளை முதல் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களும் பேராட்டத்தில் குதிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மாலை கடற்றொழில் அமைச்சினால் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் ஆகியவற்றிற்கு கடற்றொழிலாளர்களுக்கு மானியம் வழங்க தீர்;மானிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து இவர்கள் மேற்கொள்ளப்படவிருந்து போராட்டமும் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment