அம்பாறை மாட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியசேன, மாவட்டதின் தமிழ் பிரதேசங்களுக்கான அபிவிருத்தி சபை தலைவராக செயற்பட்டுவந்தார். அவரின் செயற்பாடுகளில் காணப்பட்ட முறையீடுகள் தொடர்பாக மக்கள் தொடர்சியாக ஜனாதிபதிக்கு முறையிட்டு வந்ததை அடுத்து அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
இவ்வாறு பதவிநீக்கம் செய்யப்பட்ட இவர் ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோயில் ஆகிய இரு பிரதேச சபைகளின் அபிவிருத்திக்குழுக்களின் பிரதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் தலைவராக திருமதி சுயானி நியமனம் பெற்றுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
இதேநேரம் பொத்துவில் பிரதேச அபிவிருத்திக்காக திரு. சரத் வீரசேகரா அவருகளும் கல்முனை பிரதேச அபிவிருத்திக்காக திரு தயாரத்தின அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வீதி அபிவிருத்திக்கான கொந்தராத்துக்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்தே இம்மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
No comments:
Post a Comment