Monday, February 6, 2012

நாட்டை பாதுகாக்க ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அழைப்பு

மாணவர்கள் மத்தியில் தமிழ் மொழியில் பேசினார்
தெற்கைப்போலவே வடக்கையும் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. எதிர்காலத்தில் இந்த நாட்டை பாதுகாப்பதற்கு நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்வரவேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ் மொழியில் யாழ்ப்பாணத்தில் மாணவர்களை அழைத்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்.மத்தியகல்லூரியில் இடம்பெற்ற நீச்சல் தடாகம் திறக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக்கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தமிழ் மொழியில் சரளமாக பேசினார். உங்களுக்கு எல்லாம் சுதந்திரமாக கல்வி பயிலுவதற்கும் சுதந்திரமாக வாழ்வதற்குமான சூழலை நாம் ஏற்படுத்தியுள்ளோம்.

கொழம்பு நகரப்பாடசாலைகளைகளில் உள்ளதைப்போலவே யாழ்ப்பாணத்திலும் ஏனைய கிராமப்புறங்களிலும் கல்விக்கான வசதிகளைப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடைவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதனையே அண்மையில் வெளியான புலமைப்பரிசில் பரீட்சை க.பொ.த சாதாரண தரம் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் வெளிக்காட்டுகின்றன.

கிராமப்புறப்பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிகூடிய புள்ளிகளை பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளதை நாம் காணம முடிகின்றனது. இது கிராமபுறங்களை நோக்கிய கல்விச்சமநிலையின் ஒரு வெளிப்பாடாகவே உள்ளது

யாழ்.மத்தியகல்லூரி யாழ்ப்பாணத்தில் மிகவும் முக்கியமான ஒரு கல்லூரியாக உள்ளது. இங்கிருந்து பல விளையாட்டு வீரர்கள் உருவாகியுள்ளனர். பல துறைகளிலும் இங்கிருந்து சென்ற மாணவர்கள் சாதனையாளர்களாக உள்ளனர்

ஆனால் இன்று ஒரு சிலர் நாட்டில் உள்ள சமாதான சுழலை குழப்பும் நடிவடிக்ககைளில் ஈடுபட்டுள்ளனர். எனவே பிள்ளைகளாகிய நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை பாதுகாக்க முன்வரவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment