2011 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலை பதிவு செய்யும் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் இருவேறு இடங்களில் பதியப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறு வெவ்வேறு இடங்களில் பெயர்கள் பதிவு செய்யப்படடுள்ளதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்திற்குரியர்கள் எனவும் தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கொழும்பு மாவட்டத்தில் 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆராய்ந்து இவர்களுக்கு பொருத்தமான மாவட்டங்களை உறுதிப்படுத்துவதற்காக குறித்த வாக்காளர்களுக்கு 3 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment