உக்கிரமான வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்களின் ஜீவனோபாய வாழ்க்கைக்காக சம்ளத்தை அதிகரித்துத் தருமாறு வேண்டி நின்ற மக்களுக்ளுக்கு சம்பளத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக எரிபொருள்களின் விலையை ஏற்றி மக்களை இன்னும் இன்னும் படுபாதாளத்திற்கு தள்ளிவிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜப்கஷ வறிய மற்றும் கஷ்டமான மக்களுக்கு எரிபொருளின் விலையை எக்காரணமும் கொண்டு அதிகாரிக்க மாட்டேன் என வாக்குறுதியளித்திருந்தார்.
மண்ணெண்ணெய் 35 ரூபா விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது அம்மக்களுக்கு பெரும் அடியாகும். பெற்றோல் லீட்டர் ரூபா 12 வாகவும் டீசல் விலை ரூபா 31 வாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் எதிர்வரும் காலத்தின் போது அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் மற்றும் சேவைக்கான விலை இன்னும் இன்னும் அதிகரிக்கப்படும் பட்சத்தில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டு மக்கள் பாதிப்புக்குள்ளாகுவார்கள் என அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் இந்தப் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையின் அதிகரிப்புக்கு செய்முறையற்ற கொடுமையான ஊழல்நிறைந்த நிர்வாகத்தின் காரணமாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 1800 கோடி ருபா நஷ;டத்தில் விழுந்துள்ளது என்று ரனில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment