வெலிக்கடை சிறைச் சாலையில் இருந்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கடத்தப்பட்டுள்ளார்.
குறித்த கைதி இனந்தெரியாத ஆயுத குழுவொன்றினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கடத்தப்பட்டவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில், தடுத்து வைக்கப்பட்டிருந்த களனி, பட்டிய ஹந்திய பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த கடத்தல் சம்பவம் இன்று முற்பகல் 1.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment