Monday, February 13, 2012

அமெரிக்காவுக்கான முன்னணி ஒற்றர்களில் சரவணபவான். விக்கிலீக்ஸ்

அமெரிக்காவுக்கு தகவல் வழங்குகின்றவர்களில் ஒருவராக உதயன் மற்றும் சுடர் ஒளி ஆகிய பத்திரிகைகளின் உரிமையாளர் ஈஸ்வரபாதம் சரவணபவன் செயல்பட்டு இருக்கின்றமை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2006 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருக்கிறது. இந்த ஆவணத்தை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது தலைமைக்கு அனுப்பியவேளை அதனை விக்கி லீக்ஸ் பெற்றுள்ளது.

மஹிந்த ராஜபக்ஸவுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வனுக்கும் இடையில் நல்லெண்ண தூதுவராக 2006 ஆம் ஆண்டின் ஜூன் மாத இறுதியில் ஈஸ்வரபாதம் சரவணபவன் செயல்பட்டு இருக்கின்றார். மஹிந்த ராஜபக்ஸவின் செய்தியை தமிழ்ச்செல்வனுக்கு அனுப்பி இருக்கின்றார். தமிழ்ச்செல்வன் இச்செய்திக்கு மின்னஞ்சல் மூலம் சரவணபவனுக்கு பதில் கொடுத்து இருந்தார்.

ஆனால் தமிழ்ச்செல்வனால் அனுப்பப்பட்ட மின்னஞ்சலை மஹிந்த ராஜபக்ஸவுக்கு காண்பிக்கின்றமைக்கு முன்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு 2006 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி காண்பித்து இருக்கின்றார் சரவணபவன். ஜனாதிபதி மஹிந்தருக்கு தமிழ்ச்செல்வனின் பதிலை இன்னமும் அனுப்பவில்லை என்றும் தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்து இருக்கின்றார்.

No comments:

Post a Comment