Wednesday, February 8, 2012

யாழ்.இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட சிறுவர் பாடசாலை மற்றும் பூங்கா இன்று கையளிக்கப்பட்டது

குருநகர் புதிய வீட்டுத்திட்டத்தில் இராணுவத்தினரால் புனரைமைக்கப்பட்ட சிறுவர் பாடசாலை மற்றும் பூங்கா என்பன இன்றைய தினம் பொது மக்களிடம் சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தின் 512 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் சுமார் ஒரு லட்சம் ரூபா செலவில் இப்பூங்கா மற்றும் சிறுவர் பாடசாலை என்பன புனரமைப்பு செய்யப்பட்டன. நிதிப் பற்றாக்குநை காரணமாக இவை கடந்த ஒரு வருட காலமாக செயற்படாமல் இருந்தன.

தற்போது இதற்கான நிதியினை இராணுவத்தினர் அனுசரணை மூலம் பெற்றுக்கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குருநகர் மற்றும் கொழும்புத்துறை இராணுவத்தினர் தமது நிதியில் இருந்து இவற்றை புனரைமைப்பு செய்து மக்களிடம் கையளித்தனர்

இக்கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இதில் 51 வது படையணியின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் இசற்.விக்கிரமரட்ண பிரதமாக விருந்தினராகக் கலந்து கொண்டு இவற்றை கையளித்தார்.

அத்தோடு யாழ்.மரியன்னை பேராலய அருட்தந்தை வி.சகாயராஜா யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா 511; 512; 513 படைப்பிரிவுகளின் கட்டளைத்தளபதிகள் உள்ளிட்ட உயர் இராணுவ அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இங்கு வறுமைக்கோட்டின் கீழ் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஜந்து பேருக்கு கற்றல் உபகரணங்களும் முன்பள்ளி சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.





No comments:

Post a Comment