நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல் படுத்த வேண்டும் -யாழ்.ஆயர்
நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என்றும் மூம்மொழி அமுலாக்கத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்று யாழ்.ஆயர் அதி.வண. தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்த பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் அலன் கேசல் ஹரட்ஸர் நேற்று மாலை யாழ்.ஆயரை அவரது இல்லதில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போதே அவர் இதனை வலியுறுத்தினார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் உடனயாக அமுல் செய்வதன் மூலம் மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்
மேலும் நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகளை அரசாங்கம் ஆங்கிலத்தில் மட்டும் வைத்திருக்காமல் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை உண்டாக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது தவிர இச்சந்திப்பில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வுகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக அவர் ஆயருடன் கலந்துரையாடினார் என்று தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment