தான் உயிரோடு இருக்கும் வரையில் மிருக பலி பூஜைகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.இலங்கையில் எங்காவது மிருக பலி பூஜைகள் இடம் பெற்றாலும் அதனை தனக்கு அறிவிக்குமாறும், அவ்வாறு தகவல் கிடைத்தவுடன் தான் அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார் .
பலி பூஜைகளை நிறுத்தினால் காளி அம்மனின் சாபம் தனக்கு ஏற்படும் என்று எவராவது கூறுவார்களானால், தான் அதற்கு முகம் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தான் தெய்வத்துடனேயே இருப்பதாகவும் அரக்கர்களுடன் அல்ல எனவும்,அரக்கர்களுக்கே இரத்தம் தேவைப்படும் எனவும் தெய்வங்களுக்கு அல்ல எனவும், அமைச்சர் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment