Tuesday, February 21, 2012

பொலிஸார் என்னை இலக்கு வைத்தே தாக்கினர். ஜெனிவாவில் முறையிடுவேன் என்கிறார் ஜெயலத்

அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றின்மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்திருந்தனர். இத்தாக்குதலுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தனா இலக்காகியிருந்ததுடன் தற்போது இத்தாக்குதல் தன்னை இலக்குவைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் முறையிடப்போதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜெயலத் ஜெயவர்தனவின் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்துள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன, நாட்டை தாரைவார்க்கும் மற்றுமொரு முயற்சிக்கு, தயாராகி வருகிறார் எனத் தெரிவித்துள்ளார். .

மேலும் முழு உலகிலும் சி.எச். வகை கண்ணீர் புகையே பயன்படுத்தப்படுகின்றது எனக்குறிப்பிட்டுள்ள பொலிஸ் பேச்சாளர்; அதனையே தாமும் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் இதில் எந்தவித விச பதார்த்தங்களும், உள்ளடக்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை கலைப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த கண்ணீர் புகையை பிரயோகம் செய்தவுடன் நாசகார செய்றாபடுகளில் ஈடுபடுவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களினால் முடியாது எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில் நெடுஞ்சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி, பொலிஸார் மீது தாக்குதல்களை மேற்கொண்டு, அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசிக்க முற்பட்டவர்கள் மீதே, நாம் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டோம். இந்த புகைப்பிரயோகத்தை ஒருவரை இலக்குவைத்து, மேற்கொள்ள முடியாது. கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்படுவதால், நூற்றுக்கணக்கானோர், பாதிக்கப்படுவர். இவ்வாறு ஏனையோருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத நிலையில், இவர் மீது மாத்திரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, வியப்புக்குரிய விடயமாகும். இவர் மீது விசவாயு பிரயோகம் மேற்கொள்ளப்படவும், ஏனையோருக்கு அவ்வாறு இல்லாதிருப்பதற்கும், ஒருபோதும் சந்தர்ப்பம் அமையாது. இந்த கூற்றை, நான் முற்றுமுழுதாக நிராகரிக்கிறேன்;. சீ.எச். என்ற கண்ணீர் புகையே, நாங்கள் கொள்வனவு செய்கிறோம். பிரித்தானியாவிலும், சீனாவிலுமே, இது கூடுதலாக தயாரிக்கப்படுகிறது. உலகில் பெரும்பாலான நாடுகள், இதையே பயன்படுத்துகின்றன. ஸ்பெயினின் மெட்ரிட் நகரிலும், ஜேர்மனியில் ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்களின்போதும், இதையே பயன்படுத்தினர் என அஜித் றோஹண தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment