நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தில் யாழ்ப்பாணம் சிறப்பாக செயற்பட்டது- சுகாதார அமைச்சு பாராட்டு
நுளம்புககட்டுப்பாட்டு வாரத்தில் சிறப்பாக செயற்பட்ட மாவட்டமாக யாழ்.மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 16ம் திகதி முதல் 22ம் திகதி வரையான ஒருவார தேசிய நுளம்புக்கட்டுப்பாட்டு வாரத்தில் யாழ்.மாவட்டத்தில் 49 ஆயிரத்து 429 வீடுகள் சுகாதர அதிகாரிகளால் சோதனையிடப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டம் 18 ஆயிரம் வீடுகளும் கண்டி 28 ஆயிரம் வீடுகளையும் காலி 23 ஆயிரம் வீடுகள் மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் யாழ்ப்பாணம் அதிகளவான எண்ணிக்கையான வீடுகளை சோதனை செய்துள்ளது.
இதன் போது 13 ஆயிரம் நுளம்பு தேங்கும் இடங்கள் இனங்காணப்பட்டதோடு அவர்களில் 237 பேருக்கு எதிராக வழங்கு தாக்கல் செய்யப்பட்டதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment