Friday, February 10, 2012

போர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்?

இலங்கையிலே பயங்கரவாதம் முற்றாக அழித்தொழிக்கப்பட்டு 3 வருடங்களை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. ஆனால் தற்போது புலம்பெயர் புலித்தொழிலாளர்கள் தமது வருவாயைத் தக்கவைத்துக்கொள்ள கொண்டுள்ள ஒரே சாதனமாக அமைந்திருப்பது போர்க்குற்ற விசாரணை என்ற வெற்றுக்கோஷம். போர்க்குற்றம் என்ற புலிகளின் மொத்தவியாபாரத்தை அவர்களின் பினாமி அமைப்புக்களான PGTE, TGTE, GTF, Nediyavan Group, USTPAC, TAPI, TAG, CTC, CHRV, Sangams உடபட பல அமைப்புக்கள் குத்தகைக்கு எழுத்துள்ளது.

எது எவ்வாறாயினும் புலிகளின் இவ்வெற்றுக்கோஷம் தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. புலிப்பினாமிகள் போர்க்குற்ற விசாரணை என்ற விடயத்தை தமது வசூலிப்புக்களுக்காக பயன்படுத்துகின்றனர் என்ற உண்மையை தமிழ் மக்கள் உணர்ந்துள்ளனர். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் புலம்பெயர் தேசத்தில் இருக்கக்கூடிய 90 விழுக்காடு மக்கள் தாயகம் திரும்பி இங்குள்ள தமது உறவுகளுடன் உரையாடியபின்னர் புலம்பெயர் தேசத்து பிரச்சாரங்கள் யாவும் ஒருதரப்பினரின் சொகுசு வாழ்வினை நோக்கியது என்ற முடிவுக்கு வந்துள்ளனர் என்பதை நிகழ்வுகள் நிரூபிக்கின்றது.

வன்னியிலே தமது சொந்த மக்களை பல்வேறு விதத்தில் படுகொலைசெய்து அவற்றை பல்வேறு வழிகளில் காட்சிப்படுத்தி, பிரச்சாரம் செய்து வந்த புலிகளின் புலம்பெயர் தேசத்து கட்டமைப்பு தற்போது , போர்க்குற்றம் என்ற ஒன்றை கையிலெடுத்துள்ளமை உண்மையில் தமிழ் மக்களை மேலும் வருத்துவதாகவே உள்ளது. புலிகளின் இச்செயற்பாடுகளால் மக்கள் புலிகள் மீது சினம்கொண்டாலும், துஷ்டனைக்கண்டால் தூரவிலகு என்ற தோரணையில் எதிர்த்து பேசாமலும், அதேநேரத்தில் எவ்வித ஒத்துழைப்பு வழங்காமலும் செல்வதை நிகழ்ந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகள் ஊர்ஜிதப்படுத்துகின்றது.

போர்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என பல்வேறு தரப்புக்களுக்கும் ஆழுத்தம் கொடுப்போம், மக்களே ஆதரவளியுங்கள் என புலிகள் எத்தனை விதமான பிரச்சாரங்களை மேற்கொண்டாலும் மக்கள் இவர்களின் இக்கோஷங்களுக்கு ஆதரவளிப்பதாக இல்லை.

உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் புலிகளின் பல்வேறு அமைப்புக்கள் பிரித்தானியா, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றினால் நிர்வகிக்கப்படுகின்ற ஒன்லைன் பெட்சிசன் மூலம் மக்கள் போர்குற்ற விசாரணைக்கு தூண்டவேண்டும் அல்லது வேண்டவேண்டும் என பெரும் எடுப்பில் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். லட்சக்கணக்கணக்கான மின்னஞ்சல் முகவரிகளுக்கு தபால்களை அனுப்பினர், நூற்றுக்கணக்கான இணையத்தளங்களில் குறிப்பிட்ட ஒன்லைன் பெட்டிசன்களை பிரசுரித்து பிரச்சாரம் செய்தனர், ஏகப்பட்ட தொலைக்காட்சி , வானொலிகளினூடாக பிரச்சாரங்களை மேற்கொண்டனர். ஆனால் மக்கள் இவர்களின் வேண்டுதலை ஏற்று போர்குற்ற விசாணை ஒன்று வேண்டும எனக்கோரவில்லை.

கீழே தரப்பட்டுள்ள தரவுகளைப் பார்ப்போமானால், நெடியவன் குழுவுடன் சேர்ந்து இயங்கும் ஜிரிஎப் எனப்படுகின்ற அமைப்பின் பிரதான செயற்பாட்டாளரான டாக்டர் அருஜுனா சிவநாதன் என்பவரால் வேண்டப்பட்டுள்ள பெட்டிசனில் ஆக 3436 பேர் கையொப்பம் இட்டுள்ளனர். கடந்த வருடம் ஆகஸ்டு மாதத்தில் ஆரம்பித்த மேற்படி கையொப்பம் திரட்டலுக்கு மேற்கூறப்பட்டுள்ள விளம்பர முறைகளுக்கும் அப்பால், ஏகப்பட்ட ஆட்கள் நியமிக்கப்பட்டு தமிழ் மக்கள் ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமாக தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி குறிப்பிட்ட பெட்டிசனில் கையொப்பமிடுங்கள் என மக்களை மிரட்டல் பாணியில் கேட்டும் மக்கள் இதனை கணக்கில் எடுக்கவில்லை என்றால், அதன் செய்தி யாது?


மேலும் பிரிஏப் எனப்படுகின்ற பிரித்தானிய தமிழர் பேரவை சார்பாக என்பவரால் மணிவண்ணன் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ள பெட்டிசனில் ஆக பேர் கையொப்பம் இட்டுள்ளனர். இதிலிருந்து குறிப்பிட்ட நபர்களுக்கு சொல்லப்பட்டுள்ள செய்தி யாது?



6ம் திகதி செப்டம்பர் மாதத்திலிருந்து மின்னஞ்ஞல் ஊடாக பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டதற்கான ஒரு சான்று இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இதில் நாடுகடந்த தமிழீழத்திற்கு பிரித்தானியாவில் எழுபத்தி ஆறாயிரம் மக்கள் வாக்களித்து இருக்கின்றபோதும் ஏன் அவர்கள் இவ்விடயத்தில் அக்கறை கொள்ளவில்லை என மக்களை மிரட்டி உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.



ஓட்டு மொத்தத்தில் புலம்பெயர் தேசத்திலே போர்குற்ற விசாரணை வேண்டும் எனக்கோருவோரின் எண்ணிக்கை 3496 ஆக உள்ளது. ஆனால் இந்த 3496 பேரும் யார்? புலிகளின் நிரந்த வருமானத்தை இன்று வரை புலம்பெயர் தேசத்திலே பெற்றுக்கொண்டிருக்கின்றவர்கள் 5000 பேருக்கு மேல் உள்ளனர். மேலும் புலிகளுக்காக முழுநேரம் வேலை செய்து ஊதியம் வாங்கியோர் பத்தாயிரம் பேருக்மேல் உள்ளனர். இந்த 15000 பேரால் கூட தமது மனச்சாட்சியின் பெயரால் விசாரணை ஒன்றை கோர முடியவில்லை என்பது உணர்த்தப்பட்டுள்ளது.

ஆக மொத்ததில் அனைத்தையும் இழந்து இறுதியில் போர்க்குற்றம் என்ற கோஷத்தினை வாழ்நாள் முழுக்க வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி தமது பிழைப்பைக்கொண்டு செல்ல முடியும் எனக்கருதும் ஒர் கும்பலே இங்கு கையொப்பம் இட்டுள்ளனர் என்பது நிருபிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் வாழ்நாள்முழுக்க இக்கோஷத்தினை வைத்துக்கொள்ள முற்பட்டுள்ளார்கள் என்பதனை பெட்சிசனுக்கான முடிவுத்திகதி ஊர்ஜிதம் செய்கின்றது.

15 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர், இவர்களில் 1 லட்சம் பேரிடம் கையெழுத்துக்களை பெற்றுக்கொள்வதற்கு எடுத்துக்கொண்டுள்ள கால அவகாசம் 1 வருடம். இந்த ஒரு வருட முடிவில் என்ன செய்யப்போகின்றார்கள் என்பதற்கு காலம் பதில் சொல்லும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com