அடுத்த மாதம் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ள சர்வதேச மனித உரிமைகள் அமர்வில், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள யோசனைகளுக்கு, ஆதரவை பெற்றுக்கொள்வதற்கென, எல்ரிரிஈ ஆதரவாளர்கள், தற்போது பாரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக, வெளிநாடுகளில் உள்ள இலங்கை தேசப்பற்றாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கைக்கு எதிரான யோசனைகளுக்கு, ஆதரவை பெற்றுக்கொள்வதற்கென, எல்ரிரிஈ, பெருந்திரளான நிதியை செலவிட்டு வருவதாக, தெரிவித்துள்ள தேசப்பற்றாளர்கள் தற்போது இந்த நிதியை, 100 மடங்காக அதிகரித்துள்ளதாகவும், புதிய அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன எனக் கூறுகின்றனர்.
விசேடமாக, ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும் எதிராக, பாரிய சூழ்ச்சியொன்றை, அவர்கள் அமுல்ப்படுத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் முதல் எல்ரிரிஈ ஆதரவாளர்களின் கருத்துகளுக்கு எதிராக நேரடியாக குரல் கொடுக்கும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதி நிரந்தர பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக, பாரிய சூழ்ச்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜெனீவா மாநாட்டுக்கு முன்னர், அவரை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றுவதே, எல்ரிரிஈ ஆதரவாளர்களின் குறிக்கோளாக அமைந்துள்ளது. இதற்கென, எல்ரிரிஈ ஆதரவாளர்கள், 200 கோடி ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். ஏதவாயினும் மேற்படி நிதிவிவகாரத்தில் தேசப்பற்றாளர்கள் கோட்டை விட்டுள்ளனர் என்றே அறியமுடிகின்றது. புலி ஆதரவாளர்கள் இவ்விடத்தினை வைத்து நிதி சேகரித்தாலும் அதில் பெரும்பகுதியை தமது பைகளுக்குள் அமுக்கிக்கொள்வர் என்பதை வரலாறு நிருபித்துள்ளது.
மேலும் அண்மையில், அமெரிக்க நீதிமன்றத்தில் சவேந்திர சில்வாவுக்கு எதிராக, அவரை அங்கிருந்து நாடு கடத்தும் நோக்கிலேயே, வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், இலங்கை ராஜதந்திரியொருவருக்கு எதிராக, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாதென, அந்நாட்டு நீதிமன்றம் வலியுறுத்தியது.
புலம்பெயர் தமிழர்களும், சர்வதேச எல்ரிரிஈ வலையமைப்பும், இந்த பாரிய சூழ்ச்சிக்கு நிதியை வழங்கி வருவதாகவும், அத்துடன் சவேந்திர சில்வா, இலங்கைக்காக குரல் கொடுப்பதை, நிறுத்துவதற்கு, அவருக்கு எதிரான செயற்பாடுகளில் வெற்றிகண்டால் அதை வைத்து தமது வசூலிப்புக்களை பெருக்கலாம் என புலிகள் கருதுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இலங்கையில் உள்ள தேசத்துரோகிகளை ஜெனீவா மாநாட்டுக்கு முன்னர், அமெரிக்காவிற்கு அழைத்து, அவர்களிடமிருந்து தகவல்களை திரட்டும் வேலைத்திட்டமொன்றும், இதற்கிணைவாக, முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அறியக்கிடைக்கின்றது. மேற்படி தேசத்துரோகிகளை மக்கள் இனம்கண்டுள்ளபோதும், அவர்கள் தமது மௌத்தை கலைக்காதபோது நாடு ஆபத்தில் விளக்கூடிய சந்தர்ப்பம் உண்டு எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
No comments:
Post a Comment