பொலிஸ் அதிகாரங்கள் பகிரப்பட்டதன் விளைவே மாலைதீவின் மாற்றங்கள். கோமின் தயாசிறி
காவல்துறை அதிகாரங்கள் பகிரப்பட்டதன் விளைவாகவே மாலைதீவில் ஆட்சிகவிழ்க்கப்பட்டது என சிரேஸ்ட சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார். மாலை தீவில் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை விரட்டியடித்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் காவல்துறையினர் முக்கிய பங்காற்றியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதனைப் போன்று காவல்துறைஅதிகாரங்கள் பகிரப்பட்டால், பல்வேறு ஆபத்துக்களை எதிர்நோக்க நேரிடும் என அவர்குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கிற்கு காவல்துறை அதிகாரங்களை பகிர்வது புத்திசாதூரியமான தீர்வாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாலைதீவில் ஏற்பட்ட கிளர்ச்சி குறித்து அரசாங்கம் உன்னிப்பாககவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மாலைதீவு ஜனாதிபதி முஹமட் நசீட்டை, இராணுவமும் மற்றும்காவல்துறையினரும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பதவி விலகச் செய்துள்ளதாகக்குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கினால் யுத்தத்தின்பின்னரான இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை பாதுகாத்தமை தொடர்பில் இன்னமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மன்னிப்பு கோரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
புலிகள் பலவந்தமான முறையில் சிறுவர் போராளிகளை இணைத்துக்கொண்டமைக்கு TNA இதுவரையில் கண்டனம் வெளியிடவில்லை என அவர்குற்றம் சுமத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment