இந்தநிலை தொடர்ந்தால் உதயன் தீயுடன் சங்கமமாவது வெகுதொலைவில் இல்லை.
புலிகளின் ஆட்சிக்காலத்தில் அவர்களின் ஆசீர்வாதத்துடன் தமிழ் மக்களுக்கு விஷமூட்டிவந்த உதயன் பத்திரிகை தொடர்ந்து உண்மைக்கு புறம்பான செய்திகளை யாழ் பாமர மக்களுக்கு கொண்டு செல்வதில் முன்னணியில் நிற்கின்றது. ஆனால் உதயன் பத்திரிகையின் விஷமத்தனமான செய்திகளின் பின்னணியிலுள்ள சூட்சுமங்கள் யாழ் பாமர மக்கள் அறிந்திராதபோதும், அதனை உணர்ந்திருந்த தரப்பினர் உதயனுக்கும் புலிகளுக்குமிடையேயான உறவின் பயத்தால் தமது எதிர்கருத்தினை முன்வைக்க தயங்கியிருந்தனர்.
புலிகள் அழித்தொழிக்கப்பட்டு யாழ் குடாநாட்டில் கருத்துச்சுதந்திரம் உறுதிசெய்யபட்டுள்ள நிலையில் உதயனின் விஷமத்தனமான அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துக்கள் மீது மக்கள் தமது எதிர்பினை தெரிவிக்கவும் , அதற்கு எதிராக கருத்துக்களை வெளியிடவும் ஆரம்பித்துள்ளனர்.
அண்மையில் உதயன் பத்திரிகையின் முதல்பக்கத்தில் தென்னிலங்கை வங்கிகள் வட பகுதி மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இன்று இலங்கை மத்திய வங்கியின் வடமாகாணக் கிளை முகாமையாளர் எஸ்.கௌரிசங்கர் அவர்களை யாழ் ஊடகவியலாளர்கள் அலுவலகத்தில் சந்தித்துள்ளனர். இச்சந்திப்பின்போது, மேற்படி செய்தி தொடர்பாக அவரிடம் வினவப்பட்டபோது, குறிப்பிட்ட செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் வடபகுதி மக்கள் தமது வாழ்வாதாரத் தேவைகளுக்காக வங்கிகளில் சேமித்து வைத்திருந்த தமது பணத்தை மீளப்பெற ஆரம்பித்துவிட்டதால் அரச வங்கிகளில் பணப்புழக்கம் குறைவாகக் காணப்படுவதால் ஏராளமான மக்களுக்கு தவணைமுறை வங்கிக் கடனை வழங்கமுடியாதுள்ளதாகக் குறிப்பிட்ட வங்கி முகாமையாளர் எஸ்.கௌரிசங்கர், வட பகுதி மக்களின் நன்மை கருதி தென்னிலங்கை வங்கிகளிடம் இருந்து வங்கிக் கடன்கள் பெற்றுக் கொடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
ஊடகங்கள் இவ்வாறு பொய்யான தகவல்களை வெளியிடுவதால் தென்னிலங்கை மக்களுக்கும் வட பகுதி மக்களுக்கும் இடையில் பேணப்படுகின்ற நல்லிணக்கம் பாதிக்கப்படுவதாகவும் இலங்கை மத்திய வங்கியின் வடமாகாணக் கிளை முகாமையாளர் எஸ்.கௌரிசங்கர் மேலும் தெரிவித்தார்.
உதயன் பத்திரிகைக்கு எதிராக யாழிலிருந்து அதிகாரிகள் , மக்கள் இவ்வாறு நேரடி பதிலளித்த வரலாறுகள் குறைவு. இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியின் வடமாகாணக் கிளை முகாமையாளரின் இக்கருத்து உதயன் தொடர்ந்தும் இவ்வாறான பொய்த்தகவல்களை மக்களுக்கு வழங்கினால் மக்கள் திரண்டு உதயனை தீயுடன் சங்கமமாகலாம் என எதிர்வுகூறவைக்கின்றது என யாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment