நெடுந்தீவில் உள்ள பாவனயைற்ற நீர்தேக்கம் ஒன்றலிருந்து மனித எலும்புக் கூடுகள் சில இன்றைய தினம் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இன்று காலை இவை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்ததாக தெரிவித்த பொலிஸார் மீட்கப்பட்ட எலும்புகள் யாருடையது என அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்
மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment