ஜனாதிபதி இன்று பாகிஸ்தானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று பாகிஸ்தானுக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு சென்றுள்ளார்.
அந்நாட்டின் ஜனாதிபதி ஆசிப் அல்-சர்தாரியின் விசேட அழைப்பின் பேரில் இவ்விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அங்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
ஜனாதிபதியுடன்,ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ், மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன உள்ளிட்ட பலர் இந்த விஜயத்தில் கலந்துக் கொள்கின்றனர்.
2006ஆம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் முதல் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணமாக பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தார்.
இது இரு நாடுகளின் நல்லுறவை வலுப்படுத்தியதுடன் பல முக்கிய உடன்படிக்கைகளும் இதன்போது கைச்சாத்தாகின.
0 comments :
Post a Comment