Thursday, February 9, 2012

மீனவர்கள் தொடர்பாக உண்ணாவிரதமிருந்த பௌத்த தேரர் மோசடிக் குற்றச்சாட்டில் கைது

அந்தமான் தீவில் இலங்கையைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டமையைக் கண்டித்து அண்மையில் உண்ணாவிரதமிருந்த கற்பிட்டி, கண்டக்குளி, சமுர்தர்சன விஹாரையின் பிரதம தேரரான பென்டிவெவ தியசேன நேற்று (08) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படடுள்ளார்.

2004 ஆம் ஆண்டு இவரால் மேற்கொள்னப்பட்டதாகக் கூறப்படும் மோசடி ஒன்று தொடர்பில் பொலன்னறுவை நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமையவே, இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment