முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சோ சிறைவைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
ஜனநாயகத்திற்கான மக்கள் அமைப்பும் அரசியல் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இணைந்து இந்த ஆரப்பாட்டத்தை ஏற்பாடுசெய்துள்ளது.
இதற்கு முன்னதாக, சரத் பொன்சேகா சிறைவைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, இன்று கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தை தடை செய்யுமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
பொலிஸார் இந்த கோரிக்கையை முன்வைத்த சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் நீதிமன்ற உத்தரவு அவசியமற்றது என கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கம்புலி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிறையிலுள்ள பொன்சேகாவை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லாமல் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெலிக்கடை சிறைச்சாலையில் சரத் பொன்சேகா உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார். பின்னர் சிறைச்சாலை அதிகாரிகள் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல தீர்மானித்ததையடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment