பஸ்கட்டணத்தை உயர்த்தாவிடின் பணி புறக்கணிப்பாம்! சவால்களை எதிர்கொள்ளத்தயார் அரசு
இம் மாதம் 10ம் திகதிக்கு முன் பஸ் கட்டணம் 12 விகிதம் உயர்த்தப்படா விட்டால் 13 ம் திகதி பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தென் மாகாண தனியார் போக்குவரத்து சங்கத்தின் சம்மேளனத் தலைவர் நந்தன சொய்சா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பஸ் கட்டணத்தை உயர்த்த நடடிவடிக்கை எடுக்கா விட்டால் எதிர் வரும் 13 ம் திகதி தென் மாகாணம் உட்பட ஏனைய பல மாகாணங்களிலும் பணிப் புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வகையான பணிப்புறக்கணிப்பு எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டாலும் மக்கள் சேவை நலன் கருதி எதற்கும் முகம் கொடுக்கத் தயாராகவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.
புகையிர நிலையத்திற்கு நான்கு பில்லின் ரூபா வருடக் கணக்கின் போது நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இன்று புகையிர நிலையத் திணைக்களத்தின் புகையிரத சேவையாளர்கள் ஒன்றிணைந்து செயற்படாமையின் காரணமாகவே கட்டி எழுப்ப முடியாமையுள்ளது. உண்மையிலே ஊழியர் சங்கங்கள் சில அரசியல் கட்சிகளின் கையாட்களாக இருப்பதால் அரசுக்கு எதிராக பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட முயற்சி செய்கின்றனர்.
இவர்கள் எந்தவிதமான எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற் கொண்டாலும் அதற்கு முகம் கொடுக்கத் தயாராகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment