ஈரானின் அணு ஆயுத கொள்கைக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் வளைகுடா நாடுகளில் இருந்து மேற்கத்திய நாடுகளின் எண்ணை கப்பல்கள் ஸ்ரெயிட் ஆப் ஹோர்முஷ் துறைமுகம் வழியாக செல்லவிடாமல் தடுத்து வருகிறது. இதற்காக பெர்சியன் வளைகுடாவில் அடிக்கடி போர் ஒத்திகை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது தெற்கு பகுதியில் நேற்று மீண்டும் போர் ஒத்திகையை தொடங்கியது. இந்த ஒத்திகை ஒருவாரம் நடைபெற உள்ளது. அதில் ஈரானின் போர்க்கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.
ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் குண்டு வீச்சு அச்சுறுத்தல் இருந்தது. அதற்கு ஏற்றார்போல் அமெரிக்காவின் ஆப்ரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஈரான் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டது. இதற்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், மேற்கத்திய நாடுகளுக்கு எண்ணை எடுத்து செல்வதை தடுக்கவும் ஈரான் போர் ஒத்திகை நடத்தி வருவதாக தெரிகிறது.
No comments:
Post a Comment