பிறேக் தொழிற்படாததால் மின்கம்பத்தில் மோதிய தனியார் பஸ் -நீர்கொழும்பில் சம்பவம்
திடீரென்று வேகத்தடுப்பு (பிறேக்) தொழிற்படாததன் காரணமாக தனியார் பஸ் வண்டியொன்று மின்சார கம்பத்தில் மோதி விபத்தக்குள்ளாகியுள்ளதுஎன்றஜ நீர்கொழும்பு பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் (நேற்று) சனிக்கிழமை முற்பகல் 10.15 மணியளவில் நீர்கொழும்பு லுனுகொட சந்தியில் (கச்சேரி அருகில் ) இடம்பெற்றது.
இந்த விபத்தினால் தெய்வாதீனமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை.ஆயினும் தெருவில் இருந்த மின்சார கம்பம் உடைந்த வீழ்ந்துள்ளதுடன் பஸ் வண்டியின் முன் பக்கம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
மீரிகமை - நீர்கொழும்பு பேக்குவரத்து சேவையில் ஈடுபடும் 251 அம் இலக்க தனியார் பஸ் வண்டியை அதன் சாரதி ஆர் .ஏ. கிரான் சுமுது ரணசிங்க மீரிகமையிலிருந்து நீர்கொழும்பை நோக்கி செலுத்தி வந்துள்ளார் .
நீர்கொழும்பு கொப்ப்ரா சந்தியில் வீதி சமிங்ஞை விளக்கு அருகில் வைத்து திடீரென்று பஸ் வண்டியின் வேகத்தடை செயலிழந்துள்ளது .அதே நேரம் தெய்வாதீனமாக சமிக்ஞை விளக்கின் பச்சை விளக்கு எரியவே சாரதி பஸ்ஸை தொடர்ந்து செலுத்தியவாறு பஸ்ஸை நிறுத்த முயற்சி செய்;துள்ளார்.
இந்நிலையில் வேகத்தடை செயற்படாததன் காரணமாக லுனுகட சந்தி அருகில் வைத்து மின்கம்பத்தில் மோதி பஸ் நின்றுள்ளது .
விபத்து சம்பவத்தை அடுத்து பஸ்சில் இருந்த 25 இற்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்ஸை விட்டு இறங்கி ஓடித்தப்பியுள்ளனர். இவர்களில் சிறுவர்களும் பெண்களும் அடங்குவர் .
இதே வேளை மின்சார தூண் உடைந்து விழுந்ததை அடுத்து அப்பகுதியில் மின்சாரம் முற்றாக தடைப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போக்குரவத்து பொலிசார் வீதிப்போக்குவரத்தை சீர்செய்ததுடன் ,விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தினர்.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
0 comments :
Post a Comment