தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரச் செயற்திட்டம் யாழ்ப்பாணத்தில் முழுவதும் மேற்கொளளப்;பட்ட போது ஆகக் குறைந்த டெங்கு நோயாளர் உள்ள பகுதியாக இனங்காணப்பட்டுள்ளதாக தகவல் பதிவாகியுள்ளதாக இவ்வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் பீ. ஜே. ஆர். பட்டுபந்துடாவ தெரிவித்தார்.
தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் கடந்த மாதம் 16 ம் திகதி முதல் 22 ம் திகதி வரை நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டன. அந்த வேலைத் திட்டம் தொடர்பாக கிடைத்த தகவலின்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வருடத்தில் மிகக் குறைந்த நோயாளர்கள் இனங்காணப்பட்ட பகுதியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த வருடம் 2011 ஆம் ஆண்டு கூடுதலான நோயாளர்கள் இனங்காணப்பட்ட பகுதியாக கொழும்பு நகர எல்லை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தேசிய டெங்கு ஒழிப்பு வார தினத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. 49429 இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் 13010 நுளம்பு விளையும் இடங்கள் பதிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
வீடுகள் மற்றும் கட்டடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது 948 டெங்கு பூச்சிக்குடம்பிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நுளம்பு விளையும் இடங்களை வைத்திருந்த 237 பேருக்கு எதிராக மனுக் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சித் திட்டம் கம்பஹா, கண்டி . காலி, புத்தளம், மாத்தறை , கல்முனை, குருநாகல், புத்தளம், கேகாலை, கண்டி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன. அதில் 20,000 , 40,000 தொகை அளவிலான வீடுகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment