கொழம்பிலிருந்த யாழ்ப்பாணம் வந்த இலங்கை மின்சார சபையின் குழுவினர்மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற 155 பேர் சிக்கிக்கொண்டதோடு இவர்களிடமிருந்து 9.3 மில்லியன் ரூபா பணம் தண்டமாக அறவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அறவிடப்பட்ட பணத்தில் 7.7 மில்லியன் ரூபா பணம் இலங்கை மின்சார சபைக்கும் 1.5 மில்லியன் ரூபா பணம் நீதிமன்றிற்கும் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 7ம் திகதி 10ம் திகதி வரை இச்சோதனை நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. . இதில் 77 பேர் தமது மின்வாசிப்பு மானியில் மாற்றங்களை செய்திருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதேவேளை கடந்த ஆண்டு இறுதி மூன்று மாதங்களில் நாடு முழவதிலும் இலங்கை மின்சார சபையால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கைகளில் 50 மில்லியன் ரூபா தண்டமாக அறவிடப்பட்டிருந்தது என மின்சார சபையினர் தெரிவித்தனர்.
இதேவேளை சட்டவிரோத மின்சாரம்தொடர்பாக இவ்வாறான நடவடிக்கைள் தொடர்நதும் மேற்கொள்ளப்படுமென்று மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment