வவுனியா - செட்டிக்குளம் கண்ணாடி பாடசாலை பிரதேசத்தில் சிறுமிகள் இருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 6ம் திகதி இந்த பாலியல் வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த சிறுமிகளின் உறவினர்கள் நேற்றைய தினமே செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனை அடுத்து உடனடியாக செயற்பட்ட செட்டிக்குளம் பொலிஸ் 59 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் இன்று வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
09 மற்றும் 10 வயதுடைய பாடசாலை செல்லும் சிறுமிகள் இருவரே இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment