Sunday, February 26, 2012

இறுதிக்கட்டத்தில் 8649 உயிரிழந்துள்ளனர். குடிசன மதிப்பீட்டு புள்ளவிபரம் தெரிவிக்கின்றது.

வடக்கில் நடைபெற்ற கடைசி யுத்தத்தின் போது பாதுகாப்பு படையினரைத் தவிர 8,649 உயிர் இழந்துள்ளதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஜுன் மாதம் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் 15 வரையில் வடக்கின் ஐந்து மாவட்டங்களில் மேற் கொண்ட கணக்கெடுப்பின் போது இந்த மதிப்பீடு தெரியவந்துள்ளது. அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த 2500 அரச வேவையாளர்கள் இந்தகக் கணக்கெடுப்புக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கின் சனத்தொகைக்கு அமைய 11,172 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதில்  2523 பேர் இயற்கை மரணம் அடைந்தவர்களும் ஏனைய 8649 பேர் யுத்ததின் போது மரணம் அடைந்தவர்களும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தொகையில் யுத்ததின் போது உயிரிழந்த புலி உறுப்பினர்கள் இன்னும் இருப்பதற்கான இடம் கண்டுபிடிக்கப்பட வில்லை. இதில் அவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. இன்னும் 715 பேர் மரணம் அடைந்தது குறித்து அவர்களுடைய பொறுப்புதாரிகள் சரியான சான்றுகள் பகரவில்லை.

பிரித்தானியாவில் செனல் 4 தொலைக் காட்சியின் மூலம் கடந்த காலத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இரு திரைப்படத்தில் இந்த யுத்தத்தின் போது 50000 பேர் அளவில் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.அந்த வேளையில் இலங்கையில் சேவையாற்றிய ஐக்கிய நாடுகளின் ஊடகவியலாளர் கோர்டன் மூலம் எழுதப்பட்ட ' த கேப்' என்ற நூலில் 40,000 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயங்களைக் கருத்திற் கொண்டு குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட கணக்கெடுப்பின் இறுதிக்கட்ட முடிவை கடந்தவாரம் வெளியிட்டுள்ளன. இதற்கு முன் அரசாங்கத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள கணிப்பீட்டின் படி இந்த யுத்த நடவடிக்கையின் போது இராணுவத்தினர் 6291 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 25000 பேர் காயமுற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்து

No comments:

Post a Comment