யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 81 மில்லியன் ரூபா செலவில் லிப்ற் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் பணிப்புரையிலேயே இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இப்பணிகளை மேற்கொள்வதற்குரிய போதிய வளங்கள் இன்மையால் இலங்கை மின்சார சபையினர் இதiனை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர்
இந்நிலையில் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் அமைச்சர் சம்பிக்கவிடம் இது தொடர்பில் எடுத்துக்கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமைச்சரின் பணிப்புரையில் உடனடியாகவே இதற்கான பொருட்கள் கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்டு லிப் அமைக்கும் பணிகள் நடைபெறத்தொடங்கியுள்ளன.
கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக லிப்ற் இல்லாமையால் யாழ்.போதனா வைத்தியசாலையில் முதலம் மாடியிலிருந்து 5ம் மாடி வரை நோயர்களை பணிகள் தூக்கிக்கொண்டு செல்லும் நிலையே காணப்பட்டது.
No comments:
Post a Comment