ஓமந்தை காட்டில் களிமண் வெட்டிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். சிறி ரெலோவினரா?
ஓமந்தை நொச்சிமோட்டை வணப்பகுதியில் களிமண் பாறைகளை வெட்டி விற்பனை செய்த 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். வவுனியா, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இச்சுற்றி வளைப்பினை மேற்கொண்டனர். களிமண் பாறைகளை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரம் ஒன்றும் 4 ரிப்பர் வாகனமொன்றும் இச்சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்டதாக வவுனியா வன ஜீவராசிகள் திணைக்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இக்காட்டுப்பகுதியில் களிமண் வெட்டுவதும் இயந்திரங்களை பயன்படுத்தி காடுகளை சேதப்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. நீண்ட காலமாக இவ்வாறு களிமண் வெட்டப்பட்டுள்ளதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
மன்னார் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் இவ்வாறான சட்டவிரோத களிமண் வெட்டுதல் மற்றும் செங்கல் உற்பத்தியில் சிறிரொலோ வினர் ஈடுபட்டுவந்தனர். பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளை கூலிக்கு அமர்த்தி இதனூடாக பாரிய சம்பாதிப்பு ஒன்றினை குறிப்பிட்ட அமைப்பினர் மேற்கொண்டுவந்தனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இவ்வமைப்பினரால் கூலிக்கு அமர்த்தப்பட்டிருந்த அப்பாவிகளா? என்ற கேள்வி எழுத்துள்ளது.
0 comments :
Post a Comment