விமானம் மூலமாக சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 70 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
சுமார் ஒரு கிலோகிராமிற்கும் அதிகமாக தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தத் தங்கம் இந்தியப் பிரஜை ஒருவரினால் சிங்கப்பூரிலிருந்து கொண்டுவரப்பட்டு விமானத்தில் வேறொரு நபருக்கு கைமாற்றப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சுங்க திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment