வடமாகாணத்தில் கள்ள மின்பாவனையாளர்களை மடக்கியதில் அரசுக்கு 60 மில்லியன் லாபம்
வடமாகாணத்தில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றவர்களிடம் இருந்து 60 மில்லியன் ரூபா இலங்கை மின்சார சபைக்கு வருமானமாகக் கிடைத்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து வருகை தந்த இலங்கை மின்சார சபையின் புலனாய்வுப் பிரிவினருடன் வடமாகாண அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையிலேயே இவ்வாறு சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது
மூன்று மாதங்களாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மூல்லைத்தீவு மன்னார் வவுனியா ஆகிய ஜந்து மாவட்டங்களிலுமே இவ்வாறு திடீர் சோதனைகள் நடத்தப்பட்ட போது சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றவர்களிடம் இருந்து இத்தொகை அறவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து 9.3 மில்லியன் ரூபா பணம் பெறப்பட்டதோடு கடந்த நவம்பர் மாத்தில் 36 மில்லியன் ரூபா பணமும் டிசம்பர் மாதத்தில் 12 மில்லியன் ரூபா பணமும் தண்டமாக பெறப்பட்டுள்ளது.
இதேவேளை சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றவர்களினால் இலங்கை மின்சார சபைக்கு பாரிய நட்டம் ஏற்பட்டதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இவ்றாறு சட்டவிரோதமாக மின்சாரம் பெறுபவர்கள் தொடர்பாக இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளுக்கு பொது மக்கள் அறிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment