ஈரான் நாடு பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் நாட்டை புறக்கணிக்கும் 6 ஐரோப்பிய நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் எண்ணெய் ஏற்றுமதி செய்வதை நிறுத்தி கொண்டதாக வெளிநாட்டு செய்தி தொலைக்காட்சி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
இதில் அந்த 6 ஐரோப்பிய நாடுகளின் பெயர்களை அந்த தொலைக்காட்சி நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் டெல்லியில் இடம்பெற்ற இஸ்ரேல் தூதரக கார் குண்டு வெடிப்பில் ஈரானுக்கு தொடர்பு உள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. இதற்கு ஈரானிய தூதுவர் மெக்தி நபீஷத் கூறியதாவது, இஸ்ரேலின் குற்றச்சாட்டை நாங்கள் ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை. வழக்கில் உண்மையான நிலையை இந்தியா வெளி கொண்டு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இப்போது வரை அவர்களின் இறுதி முடிவு வரவில்லை. இந்திய பாதுகாப்பு துறை இது குறித்து சொன்னால் நாங்கள் அது பற்றி பரிசீலிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment