Tuesday, February 21, 2012

பெண்ணாக மாற விபரீதமாக முயற்சித்த 5 வயது சிறுவன்!

இங்கிலாந்தை சேர்ந்த 5 வயது சிறுவன் தான் பெண்ணாக மாற விரும்புவதாக கூறி, பிறப்புறுப்பை அறுக்க முயன்றான். லண்டனை சேர்ந்தவர் டரென் அவெரி(41). இவரது மனைவி தெரசா(32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெயர் ஷாஜெரி ஜாக் ஏவெரி(5), இளைய மகன் பெயர் அலெக்ஸ்.

இதில் ஜாக் ஏவெரிக்கு 3 வயதான போது, அவனது செயல்பாடுகளில் மாற்றம் தெரிந்தது. தான் ஒரு பெண் என்று கூறி பெண் குழந்தைகளுக்கு பிடித்த ஆடைகள், விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றின் மீது விருப்பம் காட்டினான். மேலும் பெண் குழந்தைகளுடன் இருக்கவே அதிகம் விரும்பினான்.

ஜாக் ஏவெரியின் போக்கை ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்து கொண்டு, பெற்றோர் போக போக வருத்தம் அடைய துவங்கினர். இந்த நிலையில் ஜாக் ஏவெரி வளர வளர பெண்களுக்கான செயல்பாடுகளே அவனிடம் தெரிந்தது. இதன் உச்சக்கட்டமாக தனது தாயிடம் நான் ஒரு பெண் குழந்தை என்று கூறி, தனது பிறப்புறுப்பை அறுக்க முயன்றான். இதில் பயந்து போன ஜாக் ஏவெரியின் பெற்றோர், அவனை உடனடியாக ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.

மருத்துவ சோதனையில் ஜாக் ஏவெரிக்கு ஏற்பட்டுள்ள பிறவிக் குறைப்பாட்டால், அவனது மூளை அவனை ஒரு பெண்ணாக நினைக்க வைப்பது தெரிய வந்தது. இதையடுத்து பெண் குழந்தைகளை போல முடியை நீளமாக வளர்த்து கொண்டு, பெண்களை போல உலா வருகின்றான். ஜாக் ஏவெரியின் நடவடிக்கைகளுக்கு அவனது பெற்றோரும் வேறு வழியின்றி சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

தற்போது அவன் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளான். அதன் ஒரு பகுதியாக, ஜாக் ஏவெரி படிக்கும் பள்ளியில் ஆண்-பெண் பாலருக்கும் பொதுவான கழிவறையே பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றான்.

இது குறித்து ஜாக் ஏவெரியின் தாயார் தெரசா கூறியதாவது,

ஜாக் ஏவெரிக்கு 3 வயது முடிந்த நிலையில், திடீரென ஒருநாள் என்னிடம் வந்து நான் ஒரு பெண் குழந்தை என்று கூறினான். ஆனால் அதனை நான் பெரிய பொருட்டாக எண்ணவில்லை. பின்னர் ஒரு தான் ஒரு பெண் என்று கூறி அழுது கொண்டு, தனது பிறப்புறுப்பை அறுக்க முயன்ற போது தான் நிலையின் தீவிரத்தை உணர்ந்தோம் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com