Sunday, February 19, 2012

கிளிநொச்சியில் இராணுவ வாகனம் தடம் புரண்டது 5 இராணுவத்தினர் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சியில் இருந்து பரந்தன் நோக்கி சென்று கொண்டிருந்த இராணுவ ரக் வாகனம் ஒன்று தடம்புரண்டதில் 5 இராணுவத்தினர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இசம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் ஏ9 பிராதன வீதியில் கரடிப்போக்கு சந்தியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து பரந்தன் நோக்கி இராணுவ வீரர்களுடன் சென்ற ரக் ரக வாகனம் ஒன்று பாதை வேலை நடைபெற்றுக்கொண்டிருப்பதால் கரடிப்போக்கு சந்தியில் இன்னொரு வாகனத்திற்கு விலத்திக்கொடுக்க முயன்ற போது தடம்புரண்டது.

இதன்போது இதில் பிரயாணம் செய்த 5 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்கைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்னர்

இவர்களில் நான்கு பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமான முறையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இச்சம்பத்தில் கிளிநொச்சி 57 படையணியினைச் சேர்ந்த இராணுவ வீரர்களே இவ்வாறு காயமடைந்தவர்களாவார்கள். இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment