வடமாகாண வீதி புனரைமைப்பு பணிகளுக்கு ஆயிரத்து 533 கோடி ரூபா நிதியை அமைச்சரவை ஒதுக்கியுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
யுத்ததினால் சேதமடைந்த உள்ளக மற்றும் பிரதான வீதிகளை புனரைமைப்பு செய்வதற்கு என இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இவ்அபிவிருத்திப் பணிகளை சீன அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.
ஜனாதிபதியின் மகிந்த சிந்தனையின் வீதி அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் இவ்வீதிகள் யாவும் தென்னிலங்கையிலுள்ள காப்பெற் வீதிகளின் தரத்திற்கு அமைக்கப்படவுள்ளது.
இதேவேளை யுத்தத்தினால் சேதமடைந்த சேமமடுபாலத்தைப்புனரமைப்பு செய்வதற்கு 6 மில்லியன் ரூபா பணத்தையும் அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment