Tuesday, February 28, 2012

யாழ்ப்பாணத்தில் 50 வருடங்களாக செயற்படும் பௌத்த சங்கத்தின் பணிகள் பாரட்டத்தக்கது.

இலங்கையில் யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு சிறப்பாக இயங்கி வருகின்றது தமிழ் பௌத்த சங்கம். இவ்வமைப்பு இன்றைக்கு நேற்று தோற்றம் பெற்றது அல்ல. இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன் உதயம் ஆனது. இதன் ஸ்தாபக தலைவராக மானிப்பாயைச் சேர்ந்த வி. வைரமுத்து என்கிற பெரியவர் செயல்பட்டார். இவருக்கு தற்போது 92 வயது. இன்றும் உயிரோடு உள்ளார்.

அந்நாட்களில் சுமார் மூன்று இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் உறுப்பினர்களாக இருந்து உள்ளார்கள்.
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் எழுச்சிஇ வளர்ச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து இச்சங்கம் செயல்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. புத்தர் ஒரு சிங்களவர்இ பௌத்த சமயம் சிங்களத்துக்கு உரியது என்கிற கண்ணோட்டத்திலேயே புலிகள் செயல்பட்டு இருந்தனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது. இலங்கையில் அமைதிச் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இச்சங்கம் புத்துயிர் பெற்று மீண்டும் செயல்பட தொடங்கியது.

புதிய தலைவராக அ. ரவிகுமார் பதவி ஏற்றார். இச்சங்கம் புத்துயிர் பெறுவதற்கு அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் தலைவர் ஜெகத் சுமதிபாலஇ சமூக நல சேவையாளர் பானி வவல்இ யாழ்ப்பாணத்து ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி வண. விமலதேரர் ஆகியோரின் ஆக்கம்இ ஊக்கம் ஆகியன உந்துசக்திகளாக அமைந்தன.

தற்போது 3000 உறுப்பினர்கள் வரை சேர்க்கப்பட்டு உள்ளார்கள்.குறிப்பாக எதிர்கால சந்ததியினரான பாடசாலைச் சிறுவர்களே அங்கத்தவர்களில் கணிசமான தொகையினர்.மத மாற்றம் செய்வது இவ்வமைப்பின் நோக்கம் அல்ல. பௌத்தர்கள் இந்து சமயத்தை ஏற்றுக் கொள்கின்றார்கள். புத்தர் ஒரு இந்துவாக இருந்தவர்தான். இலங்கைப் பௌத்தர்களின் ஆலயங்களில் இந்துக் கடவுளர்களை தரிசிக்க முடிகின்றது. பௌத்தர்கள் இந்துக் கடவுளர்களை வழிபடுகின்றனர்.

ஆனால் இப்பக்குவம் இந்துக்களுக்கு கிடையாது. இப்பக்குவம் இந்துக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும். சகோதர சமயமாகவேனும் பௌத்தத்தை இந்துக்கள் காண்கின்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். இப்பக்குவ நிலை ஏற்படுகின்றபோது இலங்கையில் அரைவாசிப் பிரச்சினை தீர்ந்து விடும். இப்பக்குவ நிலையை இந்துக்கள் மத்தியில் ஏற்படுத்த சங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது.

இனத்தால் வேறுபட்டு இருக்கின்ற சிங்களஇ தமிழ் மக்களை சமயத்தால் இணைக்கின்ற ஒரு உறவுப் பாலமாக சங்கம் அமைகின்றது. இரு இனத்தவர்களும் ஆன்மீக ரீதியாக ஒன்று இணைகின்றமை மிகப் பெரிய பலம் ஆகும். மனதை ஒரு நிலைப்படுத்துகின்றமைக்காக இங்கு விபசனா தியானப் பயிற்சி கிரமமாக கற்பித்துக் கொடுக்கப்படுகின்றது.

உள சமாதானத்தை அடைய தியானம் உதவுகின்றது. உள சமாதானத்தை ஒவ்வொருவரும் அடைகின்றமை மூலம் உலக சமாதானத்தை அடைய முடியும் என்பது சங்கத்தின் அதீத நம்பிக்கை.
சமயஇ ஆன்மீக பணிகளோடு நின்று விடாமல் சமூகப் பணிகளையும் சங்கம் மேற்கொண்டு வருகின்றது.

பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக கற்றல் உபகரணங்களை வழங்கி வருகின்றது. இலவச சிங்கள வகுப்புக்களை நடத்தி வருகின்றது. யாழ்ப்பாண மாணவர்களை தென்பகுதி உட்பட நாட்டின் பல பாகங்களுக்கும் சுற்றுலா அழைத்து வந்து காண்பிக்கின்றது. வீடமைப்புத் திட்டங்கள்இ வேலை வாய்ப்புத் திட்டங்கள் ஆகியவற்றையும் முன்னெடுத்து வருகின்றது.

சங்கத்தின் நற்பணிகளுக்கு இராணுவ சிவில் நிர்வாகக் குழுவினர் பேருதவியாக இருந்து வருகின்றனர். அத்துடன் அரச தரப்பும் இயன்ற உதவிகளை செய்து கொடுக்கின்றது.

பௌத்த தமிழ் சங்கம் மட்டும் அல்லாது யாழ்ப்பாணத்தில் இந்து – பௌத்த கலாசார பேரவை என்கிற அமைப்பும் இயங்கி வருகின்றது. அதே போல யாழ். பல்கலைக்கழகத்தில் பௌத்த சங்கம் ஸ்தாபிக்கப்பட்டு உள்ளது.

சுவிற்சலாந்தை தளமாக கொண்டு இயங்கி வருகின்ற இந்து – பௌத்த சங்கம் இலங்கையில் அதன் செயல்பாடுகளை கடந்த மாதங்களில் இருந்து மிக ஆரோக்கியமான முறையில் முன்னெடுத்து வருகின்றது. இவ்வமைப்புக்கள் இலங்கையில் சமாதானம் ஐக்கியம் ஜனநாயகம் அமைதி ஆகியவற்றை நிலைநாட்டுவதில் காத்திரமான பங்களிப்பு வழங்கும் என்றால் மிகை ஆகாது.



No comments:

Post a Comment