Sunday, February 26, 2012

மேற்குலக சக்திகளின் சதிக்கு எதிராக வடகிழக்கு உட்பட 50 நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமை மாநாடு நாளை ஆரம்பமாகவுள்ளது. இம்மாநாட்டில் இலங்கைக்கு எதிராக மேற்குலக சக்திகள் பிரேரணை ஒன்றை முன்வைக்க மேற்கொண்டுள்ள சூழ்ச்சிகளிலிருந்து தாயகத்தை காக்கும் நோக்குடனும், நாடு தழுவிய ரீதியில், எதிர்ப்பு பேரணிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன என தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு உள்ளிட்ட 50 நகரங்களில் நாளை பிற்பகல் 03.00 மணிக்கு, இந்த பேரணிகள் இடம்பெறும்.

பெற்ற சுதந்திரம் மற்றும் அமைதியினை காத்து, நாட்டுக்கு எதிரான சவால்களிலிருந்து தாயகத்தை காக்கவும், தாயகத்தில் மீண்டும் சுதந்திரத்தை உருவாக்கிய தலைவர் உள்ளிட்ட ராணுவ வீரர்களுடன், நாட்டு மக்கள் அணிதிரண்டுள்ளதை, உலகிற்கு காண்பிப்பதே, இந்த எதிர்ப்பு பேரணியின் நோக்கமாகுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக போலி குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கும் மேற்குலக சக்திகளை தோற்கடிப்பதற்காக, இலங்கை-சீன கலாசார, ஒத்துழைப்பு சங்கமும் இணைந்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
 
ஜனாதிபதி உள்ளிட்ட ராணுவ வீரர்கள் மற்றும் தேசப்பற்றுள்ள மக்களின் பங்களிப்புடன், பயங்கரவாதத்தை தோற்கடித்து, பெற்ற வெற்றியினை திசைதிருப்ப இடமளிக்க முடியாது. இலங்கை பெற்ற வெற்றியினை பாராட்டுவதாகவும், இலங்கை-சீன சமூக மற்றும் கலாசார ஒத்துழைப்பு வழங்கம் கூறியுள்ளது. இந்த வெற்றியினை, தரக்குறைவாக மதிப்பீடு செய்து, இலங்கைக்கு எதிராக முன்னெடுத்துள்ள சர்வதேச சூழ்ச்சிகளை கண்டிக்கும் வகையில், இலங்கை மக்களுடன் இணைந்து கொள்வதாகவும், இச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment