Tuesday, February 14, 2012

தாய்லாந்தில் தொடர் குண்டுவெடிப்பு: 5 பேர் படுகாயம்!

தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காங்கில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள 3 இடங்களில் ஒரே நேரத்தில் குண்டு வெடித்தது. இதில் 5 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். குண்டு வெடிப்பு நடந்த விதம் மற்றும் எத்தனை பேர் காயமுற்றனர் என்ற விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

இன்று தாய்லாந்தின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், அடுக்குமாடி பள்ளிக்கூடம் உள்ள பகுதியில் 3 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் ஒருவர் காயமுற்ற நிலையில் இவரது பையில் இருந்து கைப்பற்றப்பட்ட அடையாள அட்டையில் லெபனான் நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.



மேலும் சில இடங்களில் பொலிசார் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இதுகுறித்து முழு விவரம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. தற்கொலை படையினர் தாக்குதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவும், இஸ்ரேலும் தாய்லாந்தில் வசிக்கும் தமது நாட்டவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment