Wednesday, February 22, 2012

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு ஒரு நாளில் 46 லட்சம் ரூபா வருமானம்

தனியார் துறையினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட ஒரு நாளில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு தென்மாகாண அலுவலகத்திற்கு 46 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

கடந்த 13ம் திகதியே இத்தொகை கிடைத்துள்ளதாக தென்மாகாண போக்குவரத்து சபையின் முகாமையாளர் எல்.பீ தயானந்தா தெரிவித்துள்ளார்.

13ம் திகதி ஈட்டிக்கொள்ளப்பட்ட வருவாய் 98 லட்சத்து 93 ஆயிரத்து 795 ரூபாவாகும். சாதாரணமாக தென்மாகாண அலுவலகம் மூலம் 52 லட்சம் ரூபாவாகும். ஆனால் 13ம் திகதி இத்தொகையான இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அன்றைய தினம் சகல மார்க்கங்களிலும் இலங்கை போக்குவரத்து சபையின் 535 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை மீண்டும் இரண்டு சதவீத சம்பள அதிகாரிப்பை தனியார் துறையினர் கோரியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com