தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு, புனர்வாழ்வு பெற்ற 42 முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்கள், விடுதலை செயயப்படவுள்ளனர். இவர்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி, அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக, புனர்வாழவு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ஜளது.
இதுவரை, கொழும்பு, வவுனியா ஆகிய புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள், அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என அறிவித்துள்ள அமைச்சு, இம்முறை தெரிவு செய்ப்பட்டுள்ள புனர்வாழ்வு பெற்ற 42 முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தார் மற்றும் உறவினர்களை, தேசத்திற்கு மகுடம் கண்காட்சி இடம்பெறும் இடத்திற்கு அழைத்து வந்து, அவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என தெரியப்படுத்தியுள்ளது.
இதேவேளை, புனர்வாழ்வு பெற்று வரும் 600 இளைஞா யுவதிகள், தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை பார்வையிடுவதற்காக, அழைத்து வரப்படவுள்ளதாகவும், அறிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment